டெல்லி: ரூ.2000 கோடி  அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல்  ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம்  மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், ரூ.2,000 கோடி சொத்துகளை காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அபகரிக்க சூழ்ச்சி செய்ததாகவும்  டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இதற்கு பதில் தெரிவித்துள்ள சோனியாகாந்தியின் வழக்கறிஞர், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் விசித்திர மானவை மற்றும் முன்னோடி யில்லாதவை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாடு விடுதலைக்கு முன்னர் 1938-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தது. இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90.21 கோடி கடன் வழங்கியது. இதற்கிடையில் நேஷனல் ஹெரால்டு பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டதால்,   காங்கிரஸ் கட்சிக்கான கடனை அடைப்பதற்காக சோனியா, ராகுல் காந்தியை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனத்துக்கு நேஷனல் ஹெரால்டு நிறுவனம் பங்குகளை மாற்றியது.

இந்த பங்கு பரிமாற்றத்தில், முறைகேடுகள் நடந்துள்ளன; சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளன  என பாஜகவின் மூத்த தலைவர்  சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

40ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டவரும் இந்த வழக்கு விசாரணை, சமீப காலமாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விஷால் கோக்னே முன்பாக  நடைபெற்று வருகிறது.

சோனியா மற்றும் ராகுல் காந்தி, மறைந்த மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோருடன் சேர்ந்து, சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே உள்ளிட்டோர், காங்கிரஸிடமிருந்து AJL நிறுவனத்திற்கு ரூ.90 கோடி கடனைப் பயன்படுத்தி கையகப்படுத்துதலை திட்டமிட்டதாக  அமலாக்கத்துறையினன் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..

ஜுலை 2ந்தேதி நடைபெற்ற  விசாரணையின்போது,  ரூ90 கோடி கடனுக்காக நேஷன்ல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை சோனியா, ராகுல் காந்தி அபகரிக்க முயன்றதாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.  இதுதொடர்பாக காரசாத வாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து வழக்கு விசாரணை  அடுத்த நாளுக்கு (ஜூலை3 ) ஒத்தி வைக்கப்பட்டது.

ஜுலை 3ந்தேதி  நடைபெற்ற விசாரணையின்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  நேஷனல் ஹெரால்டு  பங்கு மாற்றி யதில்,   மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். மூத்த கட்சித் தலைவர்களை  சமாதானப்படுத்துவதற்காக இந்த  நிதி நன்கொடை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டின் வெளியீட்டாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) க்கு சொந்தமான ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான யங் இந்தியன் மூலம் மோசடியாகப் பெற காங்கிரஸ் உயர் தலைவர்கள் சதி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. யங் இந்தியா காங்கிரஸின் மற்றொரு முகம் என்றும், கட்சியின் வெளிச்சத்தைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது என்றும் அமலாக்கத்துறை  நீதிமன்றத்தில், கூறியது.

நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை யங் இந்தியன் ரூ.90 கோடி கடனுக்கு ஈடாக மோசடி செய்ததாக விசாரணை நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து சோனியாகாந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சிங்வி,  “இது உண்மையிலேயே ஒரு விசித்திரமான வழக்கு. விசித்திரமானதை விட. முன்னோடியில்லாதது. இது எந்தவொரு சொத்தும் இல்லாமல், சொத்து பயன்பாடு அல்லது திட்டமிடல் இல்லாமல் பணமோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) இலிருந்து யங் இந்தியனுக்கு ஒரு அங்குல சொத்து கூட மாற்றப்படவில்லை. எந்த காங்கிரஸ் தலைவருக்கும் எந்த சொத்தும் பணமும் கிடைக்காது. இருப்பினும் இது பணமோசடி என்று அழைக்கப்படுகிறது,” என்று சிங்வி வாதிட்டார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED முற்றிலும் விசித்திரமான மற்றும் முன்னெப்போதும் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என்று சோனியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்கி  நீதிமன்றத்தில் தெரிவித்தார் இது   ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்றும் சாடினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   காந்தி குடும்பத்தினர் யங் இந்தியனின் “நன்மை பயக்கும் உரிமையாளர்கள்” என்றும், அதன் 76% பங்குகளை வைத்திருந்தனர் என்றும், மற்ற பங்குதாரர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் நிறுவனத்தின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றனர் என்றும் வாதிட்டார்.

இதற்கு பதில் தெரிவித்த சிங்வி,  AJL-ஐ கடனற்றதாக மாற்றுவதற்காக மட்டுமே மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கு (ஜுலை 5ந்தேதி) இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் ராகுல்காந்தி தரப்பில் வாதிடப்டுகிறது.

ஏற்கனவே சோனியா, ராகுல் உறுப்பினராக உள்ள யங் இந்தியாவுக்கு,  ஜெயந்திபாய் படேல் மற்றும் அவரது மகன் ஜிம்மிபாய் படேல் ஆகியோரிடமிருந்து ம் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக கூறப்பட்டது.   ஜெயந்திபாய் பட்டேலின்  மகனின் அறிக்கையின்படி, “மறைந்த அகமது படேலின்  (மறைந்த ராஜிவ் காந்தி  மற்றும் சோனியாவின் அரசியல் ஆலோசகர் ) அறிவுறுத்தலின் பேரில்” நன்கொடை வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

ஜிம்மிபாய் படேல், “மே 2019 இல் நடைபெறவிருந்த மக்களவைத் தேர்தலின் செலவுகளைச் சமாளிக்க ரூ.1 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாக என் தந்தை என்னிடம் கூறினார்” என்று கூறினார். அகமது படேல் தனது தந்தையிடம் யங் இந்தியனின் வங்கிக் கணக்கில் நிதியை ஏற்பாடு செய்யுமாறு கோரியதாக அவர் கூறினார்.

மற்றொரு நன்கொடையாளரான அனில் குமார் காலி, ஜூலை 2022 இல் யங் இந்தியனுக்கு ரூ.20 லட்சம் நன்கொடை அளிப்பதாக கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது அறிக்கையின்படி, “யங் இந்தியனின் வங்கிக் கணக்கில் சில பணத்தை செலுத்த ஏற்பாடு செய்யுமாறு ரேவந்த் ரெட்டி அவருக்கு அறிவுறுத்தினார். எனவே, அவரை கட்டாயப்படுத்த அவர் தனது சொந்த வங்கிக் கணக்கிலிருந்து யங் இந்தியனின் வங்கிக் கணக்கிற்கு ரூ.20 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது”.

யங் இந்தியனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத் துறையின் தொடர்ச்சியான விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த அறிக்கைகள் உள்ளன.

ரூ. 988 கோடி மோசடி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! ஜெயராம் ரமேஷ் கண்டனம்…