குரேஷியா: ரேபிட் கிராண்ட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் மீண்டும் சாதனை படைத்துள்ளார்.

ஜாக்ரெப்பில் நடந்த கிராண்ட் செஸ் டூரின் சூப்பர் யுனைடெட் ரேபிட் போட்டியில், 19 வயதான இந்திய சதுரங்க வீரர் டி குகேஷ், உலகின் முதலிடத்திலுள்ள மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார். இது அவருக்கு கருப்பு காய்களுடன் கிடைத்த வெற்றி.
இந்தப் போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பெற்றது, மேலும் அவரை தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்த்தியது.
ரேபிட் செஸ் போட்டியில் 2வது முறையாக குறுகிய இடைவெளியில் மேக்னஸை வீழ்த்தியுள்ளார் . கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்டின் 6வது சுற்றில் குகேஷ் மேக்னஸை தோற்கடித்தார். போட்டியின்பேலாது குகேஷ், உலக சாம்பியன் கார்ல்சனுக்கு பல வகையில் ஒரு முழுமையான குழப்பத்தை உருவாக்கினார், இதனால், கார்லஸ் திணறி நிலையில், குகேஷ் உலகின் நம்பர் 1 இடத்தில் உள்ள கார்ல்சனை வெற்றிகரமாக முறியடித்தார்.
ரேபிட்டின் இறுதி நாளான நாளை தொடங்கும் போது, குகேஷ் 10/12 புள்ளிகளுடன் நிகழ்வின் ஒரே தலைவராக உள்ளார்.

குகேஷின் இந்த வெற்றி இந்திய சதுரங்கத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் நிறுவப்பட்ட உலகத் தரம் வாய்ந்த வீரர்களுக்கு சவால் விடும் பிற இளம் திறமைகளின் எழுச்சியைக் காட்டுகிறது.