போபால்

த்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது

இன்று மத்திய பிரதேச முதல்வ்ர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம்,

“12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்ற 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்புகளை மாநில அரசு வழங்கும். இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.235 கோடி செலவிடப்படும்.

திறமையான மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும். எங்களுடைய செயல்பாட்டை இது பிரதிபலிக்கிறது. நம்முடைய இளம் மாணவர்களை நாம் வாழ்த்துகிறோம். அவர்களுக்கு துணையாக இந்த அரசு இருக்கும். இளைஞர்கள் மற்றும் மத்திய பிரதேசம் என இருவரின் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைக்கான கதவுகளையும் இந்த அரசு திறக்கும்.

மாணவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைய வாழ்த்துகிறேன். வருகிற 10-ந்தேதி மத்திய பிரதேசத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்படும்.

இதேபோன்று, 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 4.3 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும். இதன்படி மொத்தம் 5 லட்சம் மாணவர்கள், லேப்டாப்புகள் மற்றும் சைக்கிள்களை பெறுவார்கள். இதேபோன்று ஒவ்வொரு அரசு பள்ளியில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். ”

என அறிவித்துள்ளார்.