சென்னை: மின்சாரம் துண்டிப்பு பிரச்சினையால்,  தங்களுக்கு மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.  16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறி உள்ளது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மின்சார பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டின் மின்தடை காரணமாக பாதிக்கப்பட்ட 16 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட மறுத்து வருகிறது.

 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு, மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், தங்களால் முறையாக தோ்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய 13 மாணவா்களும், குன்றத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுதிய 2 மாணவா்களும், கே.கே. நகா் பத்மா சேஷாத்திரி பள்ளியில் தோ்வெழுதிய 1 மாணவா்  என 16 மாணவர்கள் சார்பில், ன்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நீட் தேர்வு வெளியிட முதலில் இடைக்கால தடை விதித்தது. பின்னர் மேல் விசாரணையின்போது, அரசு தரப்பில் வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  அத்துடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தோ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்ததாகவும், மாணவா்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தோ்வு நடத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது.

‘இதையடுத்து, நீட் தேர்வு வெளியிட தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் ஜுன் 15ந்தேதி வெளியானது.

இதற்கிடையில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) NEET 2025 மறு-தேர்வை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாணவர்களுக்கான இந்த முடிவு தேர்வின் போது மின் தடையை எதிர்கொண்டது. இந்த மாணவர்கள் பாதகமான நிலையில் இருப்பதாகவும், அவர்களின் சமத்துவ உரிமை மீறப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜூன் 3, 2025க்கு முன்பு மனுக்களை தாக்கல் செய்த மாணவர்களுக்கு மட்டுமே 2025 ஆம் ஆண்டுக்கான மறு-நீட் தேர்வு பொருந்தும் என கூறியுள்ளது. அதன்படி,. சுமார் 75 மாணவர்கள் இப்போது NEET UG 2025 எழுத மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இதை மேற்கோள்காட்டி,  மாணவர்கள் தரப்பில் மீண்டும் மறுதேர்வு கோரி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என நீதிபதிகள் தெரிவித்ததுடன். நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி….