சேலம்: என்னை  கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை என பாமக எம்எல்ஏ   பதிலடி கொடுத்துள்ளார்.

பாமகவை கைப்பற்றுவதில், தந்தை டாக்டர் ராமதாசுக்கும், மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக இரு தரப்பும் கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டுள்ளனர். இதற்கிடையில், அன்புமணி மாவட்டம் வாரியாக சென்று பாமக கூட்டத்தை கூட்டி, தனது தலைமையை நீரூபித்து வருகிறார்.  ஆனால், பல மூத்த தலைவர்கள் ராமாசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சேலம் தொகுதி எம்எல்ஏவான பாமகவைச் சேர்ந்த அருள், டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். சேலத்தில் நடைபெற்ற அன்புமணி தலைமையிலான பாமக கூட்டத்தையும் புறக்கணித்தார். இதை அன்புமணி நக்கல் செய்யும் வகையில், மேடையிலேயே பிரார்த்தனை நடத்தினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அன்புமணியை விமர்சிக்க தொடங்கிய  அருள்,  பாமக இருக்கும் வரை ராமதாஸே தலைவராக இருப்பார் என்றும், அதற்கு பிறகே அன்புமணி தலைவர் பொறுப்புக்கு வருவார் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ராமதாஸை கருணைக்கொலை செய்வதற்கு இணையாக கடந்த 2 ஆண்டுகளாக அன்புமணி தரப்பினர், தைலாபுரம் வீட்டில் முடக்கிவைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில்,  பாமகவில் இருந்து சேலம்  எம்எல்ஏ அருள் நீக்கம் செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது பாமகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த,  அருள் எம்எல்ஏ, தன்னை பாமகவில் இருந்துரு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என கொந்தளித்தார். மேலும்,  தன்னை கட்சியில் இருந்து நீக்க  ராமதாஸுக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பாமகவில் இருந்து நீக்கம்! அன்புமணி அறிவிப்பு…