சென்னை: சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்  செய்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நுங்கம்பாக்கத்தில் 8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சப்-இன்ஸ்பெக்டர் மீது சிறுமியின் பெற்றோர்  தங்களது பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் திருண்டு புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் பெற்றோருக்கும் , காவல்துறையினர் இடையே மோதல் ஏற்படும்  நிலை உருவானது.  இந்த நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. 4வது வகுப்பு படிக்கும் அந்த  8 வயது சிறுமியை போலீஸ் எஸ்.ஐ  மயக்க ஊசி செலுத்தி, பாலியல் வன்புணர்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் ராஜி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமி தந்தை, பாட்டியின் பராமரிப்பு வளர்ந்து வருகிறார் என்றும்  அவருக்கு தாய் இல்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுமி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அப்பகுதி முழுவதும் தேடினர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

சிறுமியின் தோழியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசித்துவரும் காவல் உதவி ஆய்வாளர் ராஜி என்பவர் வீட்டில் சிறுமி இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்துப் பதறியடித்துக்கொண்டு அங்கு சென்று தேடியபோது, சிறுமி மயக்க நிலையில் இருந்தார். மயக்கம் தெளிந்ததும், என்ன நடந்தது என அவரிடம் கேட்டனர். அப்போது அந்தச் சிறுமி, “உதவி ஆய்வாளர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரில், “எங்கள் மகளுக்கு மயக்க ஊசி செலுத்தி உதவி ஆய்வாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அந்தப் புகாரை நுங்கம்பாக்கம் போலீஸார் வாங்க மறுத்துவிட்டனர்.

எனவே, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வெளியே நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், அந்தச் சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாருக்குள்ளான உதவி ஆய்வாளர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அந்த உதவி காவல் ஆய்வாளர், “சிறுமிக்குப் பெற்றோர் தொடர்ந்து துன்புறுத்துவதால், குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் தெரிவித்துவிடுவேன் என நான் கூறினேன். அதனால் என்னைப் பழிவாங்க இதுபோல் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, காவல் உதவி ஆய்வாளர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.

அதிகரிக்கும் காவல்துறையின் அத்துமீறல்! சென்னையில் 8வயது சிறுமிக்கு எஸ்ஐ பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்…

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள்! உடற்கூறாய்வு அறிக்கை