ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை. சிறைபிடித்துள்ளது.  கடந்த 2 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படையினர் 15 தமிழக மீனவர்கள் மற்றும் 2 படகுகளை சிறைபிடித்துள்ளதால் தமிழ்நாடு மீனவர்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.

மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் சற்று உள்ளே சென்று மீன்பிடிக்கும்போது, அவர்கள்  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. இதற்கு முடிவு கட்டக்கோரி பல ஆண்டுகளாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்து மத்தியஅரசு இலங்கை அரசுடன் பலமுறை பேசியும்,  , அதை இலங்கை அரசு ஏற்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் மற்றும் அவர்களது படகினையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் அவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Powered By ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 7 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் வந்த படகினையும் சிறைப்பிடித்து சென்றனர். தலை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.