ங்காரெட்டி

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு ரசாயன ஆலையில் விபத்தில் 8 பேர் உயிரிழந்து 26 பேர் காயமடைந்தனர்.

சங்காரெட்டி மாவட்டம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணி நேரத்தில் ரியாகடர் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது., வெடிப்பு ஏற்பட்ட போது  aகட்டிடத்தில் மொத்தம் 61 பேர் இருந்துள்ளனர், மேலும் பலர் இன்னும் உள்ளே சிக்கியுள்ளனர்.

“மீட்கப்பட்டவர்களில் சிலர் கவலைக்கிடமாக காயமடைந்துள்ளனர். உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை,” என்று ஒரு காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தீயணைப்புத் துறை அதிகாரிகள், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். “தீயணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் கட்டிடத்தில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளனர்,” என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.

“உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த தொழிலாளர்களின் கவலைக்கிடமான நிலை குறித்து மிகவும் வருந்துகிறேன்,” என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேஷ் குமார் கௌட் கூறினார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் ஜி. கிஷன் ரெட்டி கூறுகையில், “தீ விபத்து குறித்து அறிந்து மிகவும் வருந்துகிறேன்… உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும்.” என்று கூறினார்.

தெலங்கானா எதிர்க்கட்சித் தலைவரும், பி.ஆர்.எஸ் (BRS) செயல் தலைவருமான கே.டி. ராமராவ் கூறுகையில்,

“பட்டான்செருவின் பஷாமயிலாரம் தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட ரியாக்டர் வெடிப்பு மிகவும் சோகமானது. விபத்து நடந்த இடத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை உடனடியாக மீட்க அதிகாரிகளுக்கு நான் வலியுறுத்துகிறேன். காயமடைந்த அனைவருக்கும் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அனைத்து தொழில்துறை அலகுகளுக்கும் பாதுகாப்பு தணிக்கைகள் கட்டாயமாகும், மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த அரசுக்கு நான் கோருகிறேன்.”

என்று தெரிவித்துள்ளார்.