டெல்லி

ச்சநீதிமன்றம் பூவை ஜெகன் மூர்த்தி எம் எல் ஏ வுக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது.

புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்ததில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.

நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். எனவே, பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்..

உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் பதிலளிக்க தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தெரிவித்ததுடன், பூவை ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.  இதற்கு ரூ.25,000 பிணைத்தொகை கட்டி வழக்கமான ஜாமினை பெறவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.