சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வரும் நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

காவல்துறையினர்மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு, போதை பொருள் நடமாட்டம், அதிகரிக்கும் பாலியல் சம்பவங்கள் போன்றவற்றால் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், தல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
பொதுவாக சட்டம் ஒழுங்கு ஒவ்வொரு மாதமும் குறித்து தலைமைச் செயலாளர் ஆய்வு கூட்டத்தை நடத்துவார். அந்த கூட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக விவாதிக்கப்படும். முதல்வர் தலைமையில்மாதங்களுக்கு ஒருமுறை ஒரு முறை சட்டம் -ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டமானது நடைபெறும்.
இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வருடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்பட காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலை எவ்வாறு உள்ளது? குற்ற வழக்குகள் எத்தனை உள்ளது? என்பது குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அந்த அறிவிப்புகளில் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாகவும், விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.