சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 9, 10 தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அமைச்சர் நேரு உறுதிப்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2023ம்ஆண்டு ஜனவரியில், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 2023ம் ஆண்டு பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வந்ததுடன், மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், பயனர்களுக்கு உதவிகளை வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வந்தார்.
அப்போது, “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஏற்கனவே சில மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையல், கடந்த வாரம், வேலூர், திருப்பத்தூர், தஞ்சை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பயனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்