தஞ்சாவூர்: திமுக எம்பி கல்யாணசுந்தரம் மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாம்பப்படையூரில் திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பயன்படுத்தப் பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து  அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

நாடு முழுவதும் போலியான குடிநீர் பாட்டிகள் நடமாடுகின்றன. பிரபலமான கம்பெனிகள் மற்றும் சுத்தமான குடிநீர் என போலி ஐஎஸ்ஐ முத்திரை பொறிக்கப்பட்டும் குடிநீர் பாட்டில்கள்  விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற பாட்டில் குடிநீரால் பல்வேறு உடல்நல பிரசசினைகள் உருவாகின்றன. அதனால்,  போலி குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை  தடுக்கும் நடவடிக்கைளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்படும் ஒரு தண்ணீர் பாட்டில் போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடன் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து  இதையடுத்து இந்திய தரநிலைகள் பணியகத்தின் மதுரை கிளை தலைவர் தயானந்த் தலைமையிலான குழுவினர், அந்த குடிநீர் பாட்டிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததுடன், அந்த  குடிநீர் தயாரிப்பு ஆலையில் ஆய்வு நடத்தினர். அப்போது, அந்த ஆலை நிர்வாகம் போலியாக ஐஎஸ்ஐ முத்திரை பதித்த லேபிள் ஒட்டி தரமற்ற குடிநீரை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அங்கு நடத்திய சோதனையில், அப்போது, பிரைன் அக்வா, ஆக்டிவ் அக்வா என வெவ்வேறு பிராண்ட் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பாட்டில்களில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 17 ஆயிரத்து 534 குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விளக்கம் கேட்டு எம்.பி. கல்யாணசுந்தரத்தின் மகன் முத்து செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

விசாரணையில்  அந்த குடிநீர் ஆலையானது,   பாம்பப்படையூரை சேர்ந்த திமுக எம்பி கல்யாணசுந்தரத்தின் மகன் முத்து செல்வத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. அது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.