உலகின் முன்னணி பணக்காரரும் அமெரிக்க தொழிலதிபருமான வாரன் பஃபெட் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வாரன் பஃபெட் 2006ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக தனது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கை நன்கொடையாக வழங்கி வருகிறார்.

அந்த வகையில் அவர் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 51300 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் தனது கிளாஸ் பி பங்குகள் மூலம் கிடைத்த வருமானத்தை அவர் கேட்ஸ் பவுண்டேசன் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இதனை அறிவித்த வாரன் பஃபெட்-க்கு தற்போது 94 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.