பூரி

டிசா மாநிலம் பூரியில் நடந்த ரத யாத்திரை கூட்ட நெரிசலில் மூவர் உயரிழந்துள்ளனர்.

 

கடந்த வெள்ளி கிழமை ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

கடவுள்களான ஜெகந்நாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய 3 பேரும் புனித ரதத்தில் அமர வைக்கப்பட்டு திரளான பக்தர்களால் இழுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 3 பேரும் ஒரு வார காலம் குண்டிசா கோவிலில் இருந்து விட்டு ஜெகந்நாதர் கோவிலுக்கு திரும்புவர்.

ரத யாத்திரையின் 2-வது நாளான நேற்று ரதங்களில் இருந்த 3 சாமிகளுக்கான திரைகளை அகற்றுவதற்காக பக்தர்கள் காத்திருந்தபோது, இன்று அதிகாலை 4 மணியளவில் குண்டிசா கோவில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விவகாரத்தில் 2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் மோகன் சரண் மஜி உத்தரவிட்டு உள்ளார். மேலும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்காக அவர் இரங்கல் தெரிவித்து கொண்டார். அதாவது பூரி டி.சி.பி. பிஷ்ணு சரண் பதி மற்றும் மற்றொரு காவல் அதிகாரி அஜய் பதி ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.