சென்னை
தமிழக அமைச்சர் சிவசங்கர் வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு தற்போது இல்லை என அறிவித்துள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர்,
”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும்”
என அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel