சென்னை

சென்னையில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்துள்ளது/

சென்னையில். வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

இதையொட்டி சென்னையில், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது.