மும்பை: நடு வானில் இயந்திர கோளாறு காரணமாக சென்னை ஏர் இந்தியா விமானம் அவசரமாக மும்பையில் தரை இறங்கியது. போல, மும்பையில் பாங்காக் செல்லும் ஏர் இந்தியா விமானம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த 12ம் தேதி விபத்தில் சிக்கியது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்களில் பல்வேறு பழுதுகள் காரணமாக விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேர் இருந்த நிலையில், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது. அதன்பின்பு பயணிகள், வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, இன்று காலை, பயணிகள் சென்னை வந்து சேர்ந்தனர்.
பாங்காக் செல்லும் ஏர் இந்தியா விமானம் மும்பையில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது.
இதனால் விமான பயணிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.