அலகாபாத்:   அதிகரித்து வரும்,  லிவ்-இன் உறவு மூலம் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது  என்று வேதனை தெரிவித்துள்ள அலகாபாத் உயர்நீதி மன்றம்,   லிவ்-இன் உறவு நடுத்தர இந்திய சமூகத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழுவதில் இளைய தலைமுறையினர் ஈர்க்கப்பட்டாலும்,  இது, பெண்கள் நலனுக்கும் நடுத்தர வர்க்க விதிமுறைகளுக்கும் எதிரானவை,  பிற்காலத்தில் அவர்கள்  பாதகமான விளைவுகளைக் காணலாம்  என உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது, இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கிறது.  இதனால் இந்திய மக்களிடையே  உலகளாவிய பார்வை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும்  தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி, உலகளாவிய சந்தைகளில் அதன் பங்கை அதிகரிக்க உதவுகிறது.  குறிப்பாக  இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது உலகளாவிய ஒத்துழைப்புகளை அதிகரிக்க உதவுகிறது.  மேலும்,  பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன, இது உலகளாவிய பார்வையை அதிகரிக்கிறது.

இதுமட்டுமின்றி,  உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள், மேலும்,  இந்தியாவின் சுற்றுலாத் துறை உலகளவில் பிரபலமாகி வருகிறது, இது உலகளாவிய பார்வையை அதிகரிக்கிறது.  இதுபோன்ற காரணங்களால்,  இந்தியாவின் உலகளாவிய பார்வையை அதிகரித்து வருகின்றன, மேலும் இளைய தலைமுறையினரிடையே பண புழக்கம அதிகரித்துள்ளது.  இது இந்தியாவை உலக அரங்கில் ஒரு முக்கிய நாடாக மாற்றுகிறது.

இதன் தாக்கம்,   இந்தியாவின் பாரம்பரியமான கலாச்சாரம், கூட்டு குடும்பம் உள்பட  சமூக  ஒழுக்கங்களை காலில் போட்டு மிதித்து,  கலாச்சார சீர்கேடுகளையும் ஏற்படுத்தி  வருகிறது. இதன் தொடர்ச்சியே திருமணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் உறவுமுறையில் வாழ்வது அதிகரித்து வருகிறது.  இளைய தலைமுறையினரிடையே   திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது ஃபேஷன் ஆகிவிட்டது. அதிலும் ஐ.டி, சினிமா துறையில் வேலை செய்பவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்கின்றனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஜஸ்ட் லைக் தேட் என அவர்கள் பிரிந்து சென்று விடுகின்றனர். இதனால் வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும், பல குழந்தைகள் அனாதைகளாக ஆகும் நிலை உருtகி வருகிறது.   இந்த ஒழுக்க சீர்கேடு, எதிர்காலத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அதிர்ச்சிகரமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஒரு பெண்ணும் ஷேன் ஆலம் என்ற இளைஞரும் சேர்ந்து வாழ்ந்தனர். அப்போது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண்ணை திருமணம் செய்ய ஷேன் ஆலம் மறுப்பு தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் உ.பி. போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஷேன் ஆலமை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தீர்ப்பளித்தது. இதனால் ஷேன் ஆலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஷேன் ஆலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில்   மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முன்பு சித்தார்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி, இதனால் பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட நேரிடுவதாக கவலை தெரிவித்தார்.

நேரடி உறவுகளை உச்ச நீதிமன்றம் ‘சட்டப்பூர்வமாக்கியது’ முதல், நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளால் நிரம்பி வழிகின்றன என்று நீதிபதி சித்தார்த் அமர்வு கூறியது.

“நேரடி உறவு என்ற கருத்து இந்திய நடுத்தர வர்க்க சமூகத்தில் தீர்க்கப்பட்ட சட்டத்திற்கு எதிரானது என்பதால் வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருகின்றன” நேரடி உறவுகள் பெண்கள் நலனுக்கும் நடுத்தர வர்க்க விதிமுறைகளுக்கும் எதிரானவை என்று நீதிமன்றம் கூறியது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதால் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இருவருக்கும் உறவு முறிந்த பின்னர் ஆண் தனியாக சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார். ஆனால் பெண்களால் அவ்வளவு எளிதாக தனது துணையை தேர்வு செய்ய முடியாது.

இளைய தலைமுறையினர் நேரடி உறவுகள் என்ற கருத்தாக்கத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டாலும், தற்போதைய வழக்கு போன்ற வழக்குகளில் அவற்றின் பாதகமான விளைவுகளைக் காணலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியது.