டெல்லி: இதுவரை எந்தவொரு தேர்தலிலும் பங்குபெறாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தவறியதற்காக, தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத குறைந்தது 24 அரசியல் கட்சிகளுக்கு (RUPPs) இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) காரணம் கேட்க நோட்டீஸ் அனுப்புகிறது. அரசியல் அமைப்பைச் சுத்தப்படுத்தவும், செயலற்ற கட்சிகளைப் பட்டியலில் இருந்து நீக்கவும் ஒரு பரந்த ECI முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து அகற்றும் நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரு தேர்தலில் கூட போட்டியிடத் தவறிய மற்றும் முறையான அலுவலகம் மற்றும் விலாசமின்றி கண்டுபிடிக்க முடியாத 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தொடங்கி உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இதுவரை எந்தவொரு தேர்தலிலும் பங்குபெறாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன்படி, அண்ணா எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம், காமராஜர் மக்கள் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், இளைஞர் மற்றும் மாணவர் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவை உள்பட 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தேர்தலில் போட்டியிடாதது குறித்து உரிய விளக்கத்தை சம்பந்தப்பட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் பதிலளிக்காத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு…