சென்னை

மிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாமகவும் திமுக கூட்டணியில் இணைகிறதா என்னும் வினாவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இன்று பாமக நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார்.  இது திமுக கூட்டணிக்கு பாமகவை அழைப்பதற்கான சந்திப்பாக இருக்கும் என சொல்லப்பட்டது. ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடம் வினா எழுப்பினர்/

அதற்கு செல்வப்பெருந்தகை

“பாமக நிறுவனர் ராமதாஸை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். அரசியல் தொடர்பாகவும், கூட்டணி குறித்த சந்திப்பும் இல்லை. திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா என்பது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்வார். அன்புமணி ராமதாஸ் புரிதல் இல்லாமல் திமுக பற்றி பேசி வருகிறார். பாஜகவை சமாதானப்படுத்தவே அன்புமணி பேசி வருகிறார். பாமகவிற்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை.

பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜக தான் காரணம். அக்கட்சியை சுவாக பண்ண பாஜக முயல்கிறது. அடுத்து அண்ணாவை குறித்து பேசி அதிமுக கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் இந்த செயலை அதிமுக சார்பில் ஏன் கண்டிக்கவில்லை. அதிமுகவிற்கு என்ன தேவை இருக்கிறது. ராமதாஸ் யார் பக்கமும் சாயமாட்டார். இந்திய அரசியலை கரைத்து குடித்தவர். தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ அதை அவர் செய்வார்”

எனத் தெரிவித்துள்ளார்.