சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா  தமிழ் பத்திரிகைக்கு  அளித்துள்ள பிரத்யேக பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை என்பது, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நிர்வாகம் சீரழிந்து கிடந்ததாகவும், உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும் அமித்ஷா கூறியுள்ளார்.  மொத்தத்தில் பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது எனக்கூறியுள்ள அவர், தற்போது அந்த காட்சி முழுமையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் அமித்ஷா தெரிவித்தவர்,  . தமிழகத்தில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக போட்டியிடும் என தெரிவித்தார். அதுபோல, தேர்தலில் வெற்றி பெற்றதும்,   முதலமைச்சர் பதவிக்கு அதிமுகவில் இருந்தே தேர்வு செய்யப்படுவார் என்று தெளிவுப்படுத்தினார்.

மேலும்,  அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை பாஜகவினர் ஒன்றிணைக்கவில்லை என்றும், உட்கட்சி விவகாரத்தில் அதிமுகவினரே முடிவு செய்ய வேண்டும் என கூறியவர்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருப்பதாகவும், சில காலங்கள் காத்திருங்கள், அனைத்து தெளிவாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்பொருமுறை அமித்ஷா இதுபோல கூட்டணி ஆட்சி என்று கூறியதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில்தான் ஆட்சி என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறியிருப்பது, அதிமுக பாஜக கூட்டணி உடையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது,  தி.மு.க. அண்மையில் நடத்திய முத்தமிழ் முருகர் மாநாடு உண்மையான முருகர் மாநாடு கிடையாது. முருகருடைய அருள் எங்களுக்குத்தான் கிடைக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப் போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாக பேசுபவர்கள் முருகர் மாநாடு நடத்தினால், முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார்.

மதுரையில் நாங்கள் நடத்திய முருகர் மாநாட்டில் 5 லட்சம் பேருக்கும் மேல் கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முழுக்க முழுக்க ஒரு பக்தி மாநாடு தான். அதில் நாங்கள் யாரையும் தவறான இடத்திற்கு கொண்டு செல்லவோ, குறை சொல்லவோ இல்லை. அரசியல் பேசவில்லை. பிற மதங்களையோ, யாரையும் புண்படுத்தியோ பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவும் இல்லை.

இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். அவ்வளவு தான். இதைத் தேர்தல் பயன்பாட்டிற்காகவோ, மக்களை குழப்புவதற்காகவோ, வாக்கு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை என்றார்.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு பொதுவானது. தி.மு.க. தனது பெயருக்காக அதனை மாற்ற பயன்படுத்துகிறது. அவர்கள் முதலில் ஒரு முருகன் மாநாடு நடத்தினர். அது முருகர் பக்தி மாநாடா என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நடத்தியது முருகர் பக்தர்களுடைய மாநாடு. ஆனால் இப்போது அவர்கள் அதை திசை திருப்பி, தி.மு.க.வுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

இதையடுத்து செய்தியாளர்கள் 2026 சட்டமன்ற தேர்தல், கூட்டணி ஆட்சி, பாஜக கூட்டணி, அமித்ஷா பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர்.  2026 சட்டமன்றத் தேர்தலிலும், 2031, 2036 தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே? பதில்: தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக ஜெயித்ததாக வரலாறு கிடையாது. அந்த வரலாறு மாறப் போவதில்லை. அ

தனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ஆட்களும் தயாராக இருக்கிறார்கள். அதை நிச்சயமாக யாரும் விரும்பமாட்டார்கள்.

அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணி என்று அமித்ஷா சொன்னதில் இருந்து தி.மு.க.வினர் பயத்தில் ஒன்று சொல்லி, அதனை மாற்றி மாற்றிச் சொல்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது.

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அமித்ஷா கூறியுள்ளாரே என்றும்,  அதற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த வைகை செல்வன், கூட்டணி ஆட்சி அமைக்க தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் கூறியவர்,  இதைப்பற்றி அமித்ஷாவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசுவார்கள் என்றார்.

ஒருவேளை 2026ல் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடித்தால், முதலமைச்சர்  என எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லவில்லையே?  என்று எழுப்பப்பட்ட கேள்விக்க,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்று ஏற்கனவே அமித்ஷா சொல்லிவிட்டார். இன்று பேசுவதை சொல்லக்கூடாது என்று விஜய் கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்க, நல்லதே நடக்கும் என்றார்.