ஜப்பான் விமான நிலையத்தில் கரடி புகுந்ததை அடுத்து 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
யமகட்டா விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஓடுபாதையில் சுற்றித் திரிந்த கரடியால் சில விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கரடியை விரட்டியடித்தனர்.
இருந்தபோதும் இரண்டாவது முறையாக மீண்டும் உள்ளே நுழைந்த அந்த கரடி பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் போக்குக் காட்டி அங்கேயே சுற்றித் திரிந்ததை அடுத்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கரடியைப் பிடிக்க பொறி அமைத்துள்ள விமான நிலைய அதிகாரிகள் வனவிலங்குகளை வேட்டையாடுவதில் தேர்ந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவு வரை அந்தக் கரடி விமான நிலையத்திலேயே சுற்றித் திரிந்ததை அடுத்து சுமார் 16 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.