சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை  முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். மேலும், அறநிலையத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழக இந்து  சமய அறநிலையத் துறை சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11.15 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம், கட்டப்பட்டு உள்ளது.

அதுபோல, சென்னை சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் 2.79 கோடி ரூபாய் செலவில்உணவருந்தும் கூடம் கட்டப்பட்டு உள்ளது. அத்துடன்,  கலையரங்கம், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடங்களை,   மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.

மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10,000/-, கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகளை வழங்கினார். இதையடுத்து பள்ளி வகுப்பறைக்குள் சென்று கணிணி அறை மற்றும் இயந்திரவியல் ஆய்வு அறைகளை ஆய்வு செய்ததுடன், வகுப்பில் ஆசிரியை மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்துவதையும் கண்காணித்தார்.

முன்னதாக பள்ளிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பள்ளி மாணவ மாணவிகள் பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தனர்