இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியா குறித்த முக்கிய முடிவுகளை வெள்ளை மாளிகை வெளியிடும் அறிவிப்பின் மூலம் தான் தெரிந்துகொள்ள முடிகிறது” என்று கூறினார்.

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வர்த்தக உடன்படிக்கைகளை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமார் 16 முறை கூறியிருந்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற ‘பிக் பியூட்டிபுல் பில்’ (‘Big Beautiful Bill’) என்ற நிகழ்வின் போது பேசிய டிரம்ப், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் அடுத்ததாக இந்தியாவுடன் ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் ஏற்பட உள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் போராகட்டும் இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவாகட்டும் ஏதுவாக இருந்தாலும் இந்தியா குறித்த முக்கிய முடிவுகளை வெள்ளை மாளிகை அறிவிப்பது குறித்து ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.