2025 ஆம் ஆண்டுக்கான தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (ஆஸ்கர்) உறுப்பினராக நடிகர் கமலஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

இந்த அழைப்பை அடுத்து அவருக்கு ஆஸ்கார் விருதுகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கமலஹாசன் தவிர, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா மற்றும் பாயல் கபாடியா ஆகியோரும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் கமலஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ் திரைப்பட ரசிகர்களை மட்டுமன்றி இந்திய திரையுலகினரை பெருமையடைய வைத்துள்ளது.

உறுப்பினர்கள் அகாடமி விருதுகளின் வெற்றியாளர்களை தீர்மானிக்க உதவுகிறார்கள். எனவே இது வெறும் கௌரவம் மட்டுமல்ல; இது ஆஸ்கார் விருது செயல்பாட்டில் ஒரு முறையான பங்கு என்று கூறப்படுகிறது.