சென்னை: புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக, தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கையை ஜூலை 1-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாநிலம் முழுவதும் திமுகவினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி, நாளை முதல் 3 நாட்கள் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணி எழுச்சியொடு தொடங்க உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கையை துவங்க இருக்கிறோம் என திமுக முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். . திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பேரணியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு சாவடி முகவர்கள், ஐ.டி. விங் மற்றும் இன்னும் பிற அணிகள் சேர்ந்து திமுக உறுப்பினர்களை சேர்க்க உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் சென்று உறுப்பினர்களை சேர்க்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே திமகவில், 234 தொகுதிகளிலும் இருந்து எங்களது அணியைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். அடுத்ததாக இந்த 234 பேரும் நாளை (வெள்ளிக்கிழமை) 27-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கொடுக்க இருப்பதாக தெரிவித்த அமைச்சர் ராஜா, இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஜூலை 1-ந்தேதி உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை முதலமைச்சரும், கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 2-ந்தேதி இந்த பணியை மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்வர். ஜூலை 3-ந்தேதி இது மாபெரும் இயக்கமாக மேற்கொள்ளப்படும். இதுபோன்ற முயற்சி இதுவரை இந்தியாவில் எந்த கட்சியிலும் நடந்தது இல்லை என தெரிவித்திருந்தார்.
அதன்படி, நாளை முதல் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.