சென்னை: சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு ரயில் நாளையும், நாளை மறுதினமும் (ஜூன் 27, 28-) என இரு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாளை திருப்பதியில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், காட்பாடியில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், 26, 28 தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயில், சேவூர் காட்பாடி இடையேயும், விழுப்புரத்தில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் . அதுபோல வேலூர் – காட்பாடி இடையேயும் பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.