சென்னை

த்திய அரசு வக்பு சொத்துக்களுக்காக புதிய இணையதளம் அமைத்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில்  வக்பு சொத்துக்களை பதிய புதிய இணைய தளம் ஒன்றை அமைத்துள்ளது,  அதற்கு இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவ்வரிடையில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜவாஜிருல்லா,

“மத்திய அரசு தொடங்கியுள்ள வக்ஃபு உமித் போர்ட்டல் சட்டவிரோதமானது, நீதிமன்ற அவமதிப்பானது. வக்ஃபு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் வக்ஃபு உமித் போர்ட்டலை மத்திய அரசு ஜூன் 6ல் தொடங்கியுள்ளது. புதிய போர்ட்டலை தொடங்கி வக்ஃபு சொத்துகளின் பதிவை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கை முழுமையாக சட்டவிரோதமானது; இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பாகும். அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ள சட்டத்தின்கீழ் சொத்து பதிவதை தீர்ப்பு வரும் வரை தவிர்த்திடுக ”

என வலியுறுத்தியுள்ளார்.