ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் 3 அர்ச்சர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பணி புரியும் 3 அர்ச்சகர்கள் குறித்த வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ஆலயத்துக்குள் அந்த 3 அர்ச்சகர்களும் மது போதையில் திரைப்பட பாடலுக்கு ஆபாச நடனம் ஆடி உள்ளனர்
மேலும் அவர்கள் மூவரும் மது போதையில் கோவிலுக்கு வரும் பக்தர்க்ள் மீது விபூதியை வீசிய்தும் வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளது. இதையொட்டி அந்த அர்ச்சகர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel