சென்னை
சிபிசிஐடி காவல்துறையினர் பூவை ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது வழக்கு பதிவு செய்துள்ளன

திருத்தணி அருகே களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி சென்று சிறிது நேரத்தில் அவரை அவர் வீட்டில் விட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக கேவி குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ‘பூவை’ ஜெகன்மூர்த்தி மற்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி ஜெயராமன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்த\தையடுத்து அவர்களை போலீசார் விசாரிக்க முடிவு செய்தனா். இதில்ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீனுக்காக மனுதாக்கல் செய்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணை நடைபெற உள்ளது.
காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து 2 பேர் மீதும் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.