டெல்லி: 2026 முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும்  10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு வாரியம்  ஒப்புதல். அளித்துள்ளது.

அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் 2026 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதமும், இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதமும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் (NEP) பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை களில் ஒன்றான மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தும் முறையை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிஎஸ்சி சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தற்போது மாணவர்களுக்கு தேர்வு எப்போது நடத்தப்படும், என்னென்ன வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்பது குறித்து சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

 அதன்படி இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும். பிப்ரவரியில் முதல் தேர்வும், மே மாதம் இரண்டாவது முறையும் தேர்வு நடத்தப்படும். பிப்ரவரியில் நடைபெறும் தேர்வு முடிவு ஏப்ரல் மாதத்திலும், மே மாதம் நடைபெறும் தேர்வு முடிவு ஜூன் மாதமும் வெளியிடப்படும்.

மாணவர்கள் இரண்டாவது முறை நடத்தப்படும் தேர்வை விருப்பப்பட்டால் எழுதலாம். ஆனால், பிப்ரவரியில் நடைபெறும் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் மாணவர்கள் மனநிறைவு கொண்டால், மே மாதம் நடைபெறும் தேர்வை எழுத வேண்டிய தேவையில்லை. அதேநேரம் மதிப்பெண்களை உயர்த்த விரும்பினால் மே மாதம் நடைபெறும் தேர்வையும் மாணவர்கள் எழுதலாம். அவ்வாறு எழுதினால், இரண்டாவதாக இந்த மாற்றங்கள் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவும், மனஅழுத்தத்தை தவிர்க்கவும், பாடங்களை புரிந்துகொண்டு படிக்கவும் வழிவகை செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.