சென்னை

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிடப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

நேற்று முன் தினம்  மதுரையில் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு அதிமுக கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளன. இந்த மாநாட்டில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்ட நிலையில்,  அவர்களை குறிவைத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும் ஆர்.எஸ்.பாரதி கூட்டாக அளித்த பேட்டியின் போது. பெரியார், அண்ணாவை இழிவுபடுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

இதைப் போல்  அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழல மக்கள் எப்போதுமே ஓரணியில் நின்று கருத்துகளை தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.