மதுரை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யவும், போதை மறுவாழ்வு மையங்கங்கள், அதில் சிகிச்சை பெற்றவர்கள், குணம் பெற்றவர்கள் என அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,  தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடுவோம் என கூறியது. அதே வேளையில் 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என கூறியது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை கடந்த நிலையில், மதுரைக்டைகள் குறைப்பதற்கு பதிலாக அதிகமாகவே திறக்கப்பட்டு உள்ளன. அதுபோல குடிமகன்களும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  மதுக்கடை தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  தமிழ்நாடு அரசு அறிவித்தபடி எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது?”  என  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளத.

மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை அமைக்க தடை விதிக்க கோரி, அப்பகுதியைச் சேர்ந்த மேகலா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “ மதுரை கைத்தறி நகரில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வசித்து வருகின்றோம். மதுரை கீழக்குயில் குடியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையை மாற்றி எங்கள் பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கடை திறக்கவுள்ள இடத்திற்கு மிக அருகாமை யில் அரசு பள்ளி, வழிபாட்டுத்தளங்கள் உள்ளது இவ்வாறு உள்ள சூழலில் மது கடை திறப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.

இந்த கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கடை திறக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் பாதிக்கப்படும் எனவே இந்த கடை திறக்க தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார். மு

ன்னதாக இந்த மனு மீதான விசாரணையில், இந்த பகுதியில் கடை திறக்க தடை விதித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்கள் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய  நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி மரியா கிளாட் அமர்வில்,  விசாரணையின்போது ஆஜரான அரசு  வழக்கறிஞர் போதை மறுவாழ்வு மையம் நடைபெறுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் நீதிபதிகள், அரசு தரப்பில் அறிக்கையில் முழு விவரங்கள் இல்லை என்று கூறியதுடன்,

தமிழ்நாட்டில் மது கடைகள் குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில் எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளது? போதை மறுவாழ்வு மையம் எத்தனை தொடங்கப்பட்டுள்ளது? அதில் எத்தனை நபர்கள் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்? எத்தனை நபர்கள் சிகிச்சை முடித்து வெளியே சென்றனர்? என்ற முழு விவரங்களை நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.