சென்னை: ஆடி மாதம் அம்மனுக்கான மாதம் என்பதால், அம்மன் கோயில்களுக்கான ஆடி மாத இலவச ஆன்மிக பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, ஆடி மாதத்தில் பக்தர்களை 5 கட்டங்களாக அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் தேதியும் வெளியிடப்பட்டு உள்ளது. (விண்ணப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது)

இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (HR&CE), தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் (TTDC) இணைந்து, ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு சிறப்பு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்கிறது. இந்த சுற்றுலாக்களில் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட பேருந்துகள், சிறப்பு தரிசனம், சில சமயங்களில் பிரசாதம், மதிய உணவு மற்றும் சிற்றுண்டி ஆகியவை அடங்கும். சுற்றுலாக்கள் பொதுவாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன, ஹோட்டல் தமிழ்நாடு போன்ற இடங்களிலிருந்து புறப்படும். பக்தர்கள் இந்த சுற்றுலாக்களை ஆன்லைனில் அல்லது குறிப்பிட்ட இடங்களில் முன்பதிவு செய்யலாம்.
ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆயிரம் மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான இலவச ஆன்மிக பயணம் 5 கட்டங்களாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள், அறுபடை வீடு முருகன் கோயில்கள், அடி மாத அம்மன் கோயில்கள், புரட்டாசி மாத வைணவக் கோயில்களுக்கு இலவசமாக ஆன்மிக பயணம் சிறப்பு பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர். அந்தவகையில், இந்த ஆண்டு ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான ஆன்மிக பயணம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக ஜூலை 18-ம் தேதியும், 2-ம் கட்டமாக ஜூலை 25-ம் தேதியும், 3-ம் கட்டமாக ஆக. 1-ம் தேதியும், 4-ம் கட்டமாக ஆக. 8-ம் தேதியும், 5-ம் கட்டமாக ஆக. 15-ம் தேதியும் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
விண்ணபப் படிவம் hrce – aadi aplliction
முதல் கட்ட ஆன்மிக பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 11-ம் தேதி கடைசி நாளாகும். அதேபோல், 2-ம் கட்டத்துக்கு ஜூலை 18-ம் தேதியும், மூன்றாம் கட்டத்துக்கு ஜூலை 25-ம் தேதியும், நான்காம் கட்டத்துக்கு ஆக.1-ம் தேதியும், 5-ம் கட்டத்துக்கு ஆக.8-ம் தேதியும் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், அதற்கான வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே ஆன்மிக பயணம் தொடங்கப்பட உள்ளது.
எனவே, விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத் துறை இணையதள பக்கத்தில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்த பின், மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
ஆன்மிக பயணம் கோயில்களின் விவரம்
சென்னையில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.
அதேபோல் மதுரையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில் ராக்காயியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களையும், தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில் வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களையும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகம் ஆன்மீக புத்துணர்ச்சியின் சிறந்த ஆதாரமாக இருந்து வருகிறது. மாநிலத்தில் 33,000 பழமையான கோயில்கள் உள்ளன. மத வழிபாட்டுத் தலங்களுக்கான யாத்திரை மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர்வாசிகளுக்கு மகத்தான பொருளாதார ஆதாயங்களையும் கொண்டு வருகிறது. பெரும்பாலான கோவில்கள் சிவன், விஷ்ணு மற்றும் அவர்களது துணைவியார்களை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இந்த கோயில்கள், அவற்றின் வடிவமைப்பு மற்றும் சிற்பங்களால் மட்டுமல்ல, அவற்றின் வளாகத்தில் பக்தி, நடனம், பாடல், பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் விருந்துகள் போன்ற நிலையான செயல்பாடுகளால் அறியப் படுகின்றன.
தமிழகத்திற்கு மேலும் அழகு சேர்த்தவர்கள் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் விஜயநகரம் போன்ற அந்நாள் ஆட்சி யாளர்கள். கி.பி 700 இல், தமிழகத்தின் மிகச்சிறந்த பழமையான கோவில்களை செதுக்கிய சிறந்த ஆட்சியாளர்களில் பல்லவர்கள் முதன்மையான வர்கள். கற்களால் கோயில்களை செதுக்குவதில் அவர்களின் சிறப்பு இருந்தது. கி.பி.900க்குப் பிறகு ஆட்சி செய்த சோழர்களின் காலம், கோபுரங்கள், மண்டபங்கள் அமைத்து அழகுபடுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோயில்களின் எண்ணமாக இருந்தது. விஜயநகரம் மற்றும் நாயக்கர்கள் பாணி, சன்னதிக்கு அருகில் நுழைவாயில் வளைவுகள், பிரமாண்டமான தூண்கள் மற்றும் வளைந்த பாதைகள் ஆகியவற்றின் மூலம் கலை முன்னோக்கி கொண்டு வந்தனர்.
மயிலை கபாலீஸ்வரர், சிதம்பரம் நடராஜர்; மீனாட்சி கோவில், மதுரை; ராமேஸ்வரம் கோவில்; பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்; கும்பகோணம்; மாரியம்மன் கோவில், சமயபுரம்; வேளாங்கண்ணி; நாகூர் தர்கா; திருச்செந்தூர் முருகன் கோவில்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்; பழனி; பாபநாசம்; ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவில், சங்கரன்கோவில்; அருணாச்சல கோவில், திருவண்ணாமலை மற்றும் குமரியம்மன் கோவில், கன்னியாகுமரி ஆகியவை தமிழ்நாட்டின் பிரபலமான யாத்திரை தலங்களாகும்.
