மாதவரம்: புறநகர் பகுதியான செங்குன்றம் எனப்படும் ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், அங்கு வரும் சில பேருந்துகளின் வழித்தடங்கள் தற்காலைகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வெளியாகி உள்ளது.

செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 36 வழித்தடங்கள், 202 பேருந்துகள் 24.06.2025 அன்று முதல் புழல் ஏரி எதிர்புறம் உள்ள சாமியார் மடம் காலி மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்,  அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (செங்குன்றம் பேருந்து நிலையம்) ரூ.250 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 36 வழித்தடங்கள், 202 பேருந்துகள் 24.06.2025 அன்று முதல் புழல் ஏரி எதிர்புறம் உள்ள சாமியார் மடம் காலி மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

அதன்படி, திருவள்ளூர், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, புழல், Grand line மார்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்ட சாமியார் மடம் காலி மைதானத்திற்கு வந்து பயணிகளை இறக்கி/ஏற்றி செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பேருந்துகளின் தடம் எண் விவரம் அட்டவணை கீழ்வருமாறு

1) திருவள்ளூர் மார்க்கம்     62B, 61R, 65H, 505, 505K

2)  பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி மாக்கம்     512, 547, 557, 557A extn, 557C, 557M, 558A, 558B, 558C, 558P, 592, 593 cut,

3) புழல் மார்க்கம் 113, 114, 114A, 242, 57, 157, 157E, 62, 62A, 62cut, 104, 104K, 57C, 57C cut,

4) Grand line, அருமந்தை மார்க்கம்  57E, 57G, 36K, 36V, 58V