கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில்.  அமைந்துள்ளது.   இந்நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சேவை உள்ளது.

தின்சரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த இயற்கை அழகை ரசித்து ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைகின்றனர்.

இன்று , கொடைக்கானலில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.