சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாவட்டம்தோறும் மினி டைடல் பூங்கா அமைப்பதில் தீவிம் காட்டி வரும் நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்களில் மினி டைடல்  பூங்கா அமைக்க டெண்டர் கோரியுள்ளது.

அதன்படி,  தமிழ்நாட்டில் நெல்லை, குமரியில் மினி டைடல் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டைடர் பூங்கா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அதுதொடர்பான  வடிவமைப்பு மற்றும் திட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், பல்வேறு ஆலைகள், மென்பொருள் நிறுவனங்கள் என தொழில் வளர்ச்சியில் திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் ஐ.டி. நிறுவனங்கள் குவிவதைத் தவிர்த்து, சிறிய நகரங்களிலும் தொழில் தொடங்க வாய்ப்புகளை ஏற்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில்,   ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க் அல்லது மினி டைடல் பார்க் அமைப்பதன் மூலம், மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை பரவலாக்குவது அரசின் நோக்கமாக கொண்டு செயலாற்றி வருகிறது.

இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க்க கட்டி திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம்,  திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் சமீபத்தில் 330 கோடி ரூபாய் செலவில் 21 தளங்களுடன் கூடிய டைடல் பார்க் திறக்கப்பட்டது.. இதைத்தொடர்ந்து, தற்போது மேலும் 2 மாவட்டங்களில் டைடல் பார்க்க அமைக்க திட்டமிட்டு , அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.