அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியதை அடுத்து, இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்காவை பழிவாங்கப்போவதாகக் கூறியுள்ளார்.

“ஈரானை தாக்குவதன் மூலம் சியோனிஸ்டுகள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டனர் ” ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டது. அதற்கு தகுந்த தண்டனை கிடைக்கும். “தண்டனை உடனடியாகத் தொடங்கும்” என்று கமேனி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியது. இதன் மூலம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் அது நேரடியாகத் தலையிட்டது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பது குறித்து ஈரான் தலைவர்கள் கூறிவரும் நிலையில், யூதர்களின் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் சியோனிஸ்டுகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் உச்ச தலைவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.