சென்னை: கிருஷ்ணகிரியில், ‘மா ‘விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் வரும் 20ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள், மாம்பழங்களை சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழ்நாட்டில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் திமுக அரசு மவுனம் காத்து வருகிறது. இதையடுத்து திமுக அரசுக்கு எதிரான அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.
கிருஷ்ணகிரி பேருந்து நிறுத்தம் அருகே நாளை மறுநாள் (ஜுன் 20ந்தேதி) உண்ணாவிரதம் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
‘மா’ சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ‘மா’ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க விடியா திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.6.2025 -வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
