சென்னை

ஸ்ரோ வின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்த்தாளர் நெல்லை சு முத்து மரணத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின்,

”இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழிபெயர்ப்பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய முத்து , அப்துல் கலாம் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

எனத் தெரிவித்துள்ளார்.