ஊட்டி
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிகப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் அதற்கு முன்னதாகவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த தொடர் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து மண் சரிவும் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது., தொடர் மழை காரணமாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Today, Schools Holiday, 4 Taluks, Nilagiri district