டெல்லி: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில், பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும், தனியார்பள்ளியான புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் மாநில அளவில் முதலிடம் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 707 மருத்துவக் கல்லூரிகளில் 109048 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த தேர்வு முடிவுகளின் படி நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 39 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ள நிலையில், இதன்மூலம் 5350 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் 26 தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம், 4100 இடங்களும், 12 சுயநிதி தனியார் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளின் மூலம் 1950 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. (மொத்தம் 11,450 இடங்கள்)

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில், இதுவரை இல்லாத அளவில் 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இது தமிழகத்தில் மக்களிடையே நீட் தேர்வு உள்ள வரவேற்பை வெளிக்காட்டி உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வு மே மாதம் 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ மாணவியரும் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களில், இதுவரை இல்லாத அளவில் பல ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இவர்களில், 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களி 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இந்தியா முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் மாணவர் சூரிய நாராயணன் 720 க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27 வது இடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் மாணவர் சூரியநாராயணன் சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 495/500 மதிப்பெண்கள் பெற்றதும் ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில், பொதுப் பிரிவினருக்கு நீட் தேர்ச்சி மதிப்பெண் 138 ஆகும். ஓபிசி பிரிவினருக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்த பட்ச மதிப்பெண்கள் 137-108 ஆகும். SC/ST பிரிவினருக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 137-108 ஆகும்.

கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 79,322 பேர் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1,40,158 பேர் பதிவு செய்த நிலையில், 1,35,715 பேர் தேர்வை எழுதினர். இதில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கட் – ஆஃப் மதிப்பெண்கள்:
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு குறைந்தபட்சம் கட்-ஆஃப் 127 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 113 ஆக குறைந்துள்ளது. பொதுப் பிரிவினருக்கான நீட் கட் ஆஃப் 686-144 ஆக குறைந்தது, 2024-ல் 720-162 ஆக இருந்தது. SC, ST மற்றும் OBC வேட்பாளர்களுக்கான கட்-ஆஃப் 2024-ல் 161-127 இலிருந்து 143-113 ஆகக் குறைந்தது.
முதலிடத்தை 99.9999547 என்ற மதிப்பெண்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவன் மகேஷ் குமார் என்ற மாணவர் பிடித்துள்ளார். தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் அவதியா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிஷாங் ஜோஷி 2-ம், 3-ம் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடில் முதலிடம் பிடித்த எஸ். சூர்யா நாராயணன்: அகில இந்திய அளவில் 27-வது இடத்திலும், தமிழ்நாட்டில் முதலிடத்தையும் எஸ். சூரிய நாராயணன் என்ற மாணவர் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 99.9987779 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 2-ம் இடத்தை அபினீத் நாகராஜ் என்ற மாணவர் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 50-வது இடத்தை பெற்று சாதித்துள்ளார். மூன்றாம் இடத்தை ஜி.எஸ். புகழேந்தி பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 61 இடம் கிடைத்துள்ளது. நான்காவது இடத்தில் கே.எஸ். ஹ்ருதிக் விஜயா ராஜா (63), 5வது இடத்தை ஏ.ஜே. ராகேஷ்(78) பெற்றுள்ளனர்.
அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள்: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% இடங்கள் மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரி இடங்கள், இதர மாநிலங்களின் 15% அரசு மருத்துவ இடங்கள் மத்திய அரசின் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் mcc.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ இடங்களுக்கு tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெற ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. மாணவர்கள் நேரடியாக ஆன்லைன் வழியாக உடனே மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க லாம். இதற்கான தரவரிசை பட்டியல் வெளியாகி, கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இதற்கான விண்ணப்பம் தொடங்கப்படும். MCC வெளியிடும் கலந்தாய்வு அட்டவணை அடிப்படையில் மாநிலங்கள் அளவில் கலந்தாய்வு நடைபெறும்.
இந்தியாவில் மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் ஒவ்வொரு முறையும் மாறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், மருத்துவக் கல்வியின் நிலப்பரப்பு அரசாங்கக் கொள்கைகளால் வடிவமைக்கப்படுகிறது, மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கிறது. சமீபத்திய என்எம்சி தரவுகளின்படி, நீட்டில் எத்தனை எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன என்பதை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு, 707 மருத்துவக் கல்லூரிகளில் 109048 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையிலான எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
மாநிலம் வாரியாக உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் விவரங்களை கீழே உள்ள பட்டியலில் பார்க்கலாம்.
