சென்னை
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.
”2025-2026 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ்” செயல்படுத்தப்படும் பள்ளி / ஐடிஐ/டிப்ளோமா/கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கிப் பயில்வதற்கு ஆர்வமுள்ள மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் 10.06.2025 முதல் பெறப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணாக்கர்கள் https://nallosai.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கு மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும், மாணாக்கர் மத்திய/மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தங்கிப்பயில வேண்டும்.
மாணாக்கர்கள் கூடுதல் தகவல்களுக்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை அலுவலக நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
என்று கூறப்பட்டுள்ளது