திருச்சி
தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக எண்ணுவது நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் தமிழக அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்
அந்த பேட்டியில் அமைச்சர் கே என் நேரு,
தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள்.
இதுவரை பா.ஜ.க.வினரால் தங்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை. எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் எல். முருகன் ஈடுபடுகிறார் . அவரது எண்ணம் நிறைவேறாது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். இது குறித்து தான் கருத்து கூற முடியாது.
என்று கூறியுள்ளார்.