குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேகனி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் விமானம் விழுந்து நொறுங்கியது.

விபத்து நடந்த இடத்திலிருந்து கரும் புகை வானத்தை நோக்கி எழுந்தது.

இதையடுத்து விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலனஸ்கள் விரைந்ததை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 220 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.