சென்னை: சென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனையான ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஒருவர் போலியான மருத்துவர் வேடத்தில் சென்று, நோயாளியிடம் இருந்து, நகை, செல்போன் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் அரசு மருத்துவமனைக்கு தினசரி பல நூறுபேர் வந்துசெல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இந்த மருத்துவமனையில் மருத்துவர் வேடத்தில் ஒருவர் கொள்ளை சம்பவத்தல் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை, மருத்துவர் என கூறி பரிசோதித்த நிலையில், சில நோயாளிகளிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளதாககூறப்படுகிறது. கடந்த 6ந்தேதி அன்று அவர் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார். வார்டுகளுக்கு சென்று சில நோயாளிகளை பரிசோதித்துள்ளார். மேலும், அவர்களிடம் காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு, அவர்களிடம் நைசாக பேசி பணத்தையும் கறந்துள்ளார்.
இவர் ஒரு நோயாளியை பரிசோதித்தபோது சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர், அவரிடம் விசாரித்த போது, அவர் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் அந்த நபர் சிலரிடம் பணம் பற்றும் செல்போன், நகை என பலவற்றை பறித்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
விசாரணையில், நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து செல்வதாக அழைத்து சென்ற அந்த போலி மருத்துவர், அந்த பெண்ணிடம், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதன்பிறகே இந்த நகை பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு புகாரில் சிக்கியவர் போலி மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர், நோயாளியிடம் இருந்து, , 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் , மர்ம நபரான போலி மருத்துவமனை தேடி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.