மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பான ராகுல் விமர்சனம் ‘குழந்தைத்தனமான நடவடிக்கை’ என மாநில பாஜக கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது, இதுபோலத்தானே தேர்தல் நடந்தது. அப்போது ஏன் தேர்தல் ஆணையத்தை குறைசொல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு (2024)  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த வெற்றி பாஜகவுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நடைபெற்ற மேட்ச் பிக்சிங் என்று குற்றம் சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக ராகுல் எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, மகாராஷ்டிராவின் பிரபல நாளிதழில் வெளியாகி உள்ளது.  ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த  கட்டுரை, மாநிலத்தில் மீண்டும் ஒரு அரசியல் புயலைத் தூண்டியுள்ளது.  இந்திய  தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் முதல், பெயர் மாற்றங்கள் மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை உயர்த்துவது போன்ற உள்ளூர் அளவிலான கையாளுதல்கள் வரை பல கவலைகளை ராகுல்காந்தி அந்த கட்டுரையில் பட்டியலிட்டு,   இது ஒரு மோசடியான உத்தரவைக் குறிக்கிறது என்று சாடியிருந்தார். மேலும்,   மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பான முக்கிய கருத்துக் கணிப்புத் தரவுகளை முழுமையாகப் பொதுவில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மாநில பாஜக எதிர்வினையாற்றி வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு எதிரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனங்களை தேர்வித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே  மாநிலத்தில் தேர்தல் மோசடிகள் குறித்த காந்தியின் குற்றச்சாட்டு, அவர்  “தேர்தல் தோல்விகளால் கவலையடைந்துள்ளார்” என்பதை வெளிக்காட்டுவதாக கூறினார். இந்தத் தோல்விகளால், அவர் தனது சொந்த செயல்திறனையும் தனது கட்சியின் செயல்திறனையும் மறைக்க இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்” என்று  கூறினார்.

 தேர்தல் ஆணையத்தின் மீதான தனது தாக்குதலை ராகுல் காந்தி தீவிரப்படுத்தி வருவதாகவும், ஒரு “தவறான” பதிலை மீண்டும் மீண்டும் தெரிவித்து, தேர்தல் ஆணையத்தின்  “நம்பகத்தன்மையை”  குறைத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

 “ராகுல் காந்தியிடம் நான் கேட்டால், 2009 இல் மத்தியிலும் மாநிலத்திலும் அவரது கட்சியின் அரசாங்கங்கள் இருந்தபோது தேர்தல்கள் நடந்தபோது, ​​மக்களவைத் தேர்தலின் போது மகாராஷ்டிராவில் 7.29 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.” அதன் பிறகு மாநிலத்தில் நடந்த தேர்தல்களில், 7.59 கோடி வாக்காளர்கள் இருந்தனர். “அப்போ, அப்போதைய தேர்தல் ஆணையத்தை குறிவைப்போமா? அப்போதைய தேர்தல் ஆணையத்தை துஷ்பிரயோகம் செய்வோமா? இவ்வளவு பெரிய நிறுவனத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். தேர்தல் செயல்முறையை சேதப்படுத்த விரும்புகிறீர்கள். இது ஒரு குழந்தைத்தனமான நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன்,” என்று  வான்குலே மேலும் கூறினார்.

முன்னதாக, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தொடர்பாக,  ராகுல் ECI-யிடம் இரண்டு விஷயங்களைக் கோரினார்: ஒன்று, மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான முழு தரவுகளையும் வெளியிட வேண்டும்.

இரண்டு, மகாராஷ்டிரா வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிந்தைய அனைத்து CCTV காட்சிகளையும் வெளியிட வேண்டும்.