சிம்லா

சிம்லா மருத்துவமனையில் சோனியா காந்திக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி(வயது 78), தனது மகள் பிரியங்கா காந்தியுடன் சிம்லாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவருக்கு அங்கு திடீரென அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோனியா காந்திக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக லேசான உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்கு பிறகு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயர்நத்த அழுத்தத்துக்கான சிகிச்சை முடிந்து சோனியா காந்தி, சிம்லாவின் சராபா பகுதியில் உள்ள பிரியங்கா காந்தியின் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.