சென்னை: ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனுவில் கமல் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தகவல் வெளியாகி உள்ளது. அதில், கமலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.305 கோடி என்பது தெரிய வந்துள்ளது.
கமலின் அசையா சொத்துக்கள் அசையா சொத்துக்கள் ஏறக்குறைய 245 கோடி என்றும், அசையும் சொத்துக்கள் 60 கோடி என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது திமுக கூட்டணியில் உள்ள மநீம கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கி உள்ளது. இந்த இடத்துக்கான தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். . இந்த தேர்தலில் போட்டியிடும் கமல் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை தொடர்ந்து அவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. அன் விவரம் வருமாறு:-
கமல்ஹாசனிடம் 4 கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி.4 கார்கள்
1) பி.எம்.டபிள்யூ 2) மெர்சிடஸ் பென்ஸ், 3) லக்சஸ் 4) மகேந்திரா ஆகிய நான்கு கார்கள் உள்ளன.
2023-24ம் நிதியாண்டில் வருவாய்- ரூ.78.90 கோடி.
ரூ.49.67 கோடி கடன் உள்ளது என என குறிப்பிட்டுள்ளார். இது வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசையும் சொத்துகளின் மதிப்பு- ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துக்கள்- 245 கோடியே 86 லட்சம் ரூபாய்
( இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.305 கோடியே 55 லட்சம் )
கையில் இருக்கும் ரொக்க பணம்: ரூ.2.60 லட்சம்.