ஆந்திர பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தவும் இரவு நேரப் பணியில் மகளிரை ஈடுபடுத்தவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் இந்த முடிவுக்கு அங்கு தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆனால் சந்திரபாபு நாயுடு அரசோ, அந்நிய முதலீடுகளை மேலும் மேலும் அதிகமாக ஈர்ப்பதற்கும் மாநிலத்தின் உற்பத்தியை பெருக்குவதற்கு இது மிகவும் அவசியம் என்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்புதான், இதே போன்ற காரணங்களைச் சொல்லி தனியார் நிறுவன ஊழியர்களின் பணி நேரம் 8 மணியிலிருந்து 9 மணி நேரமாக ஆந்திர பிரதேசத்தில் உயர்த்தப்பட்டது.
நாடு முழுவதும் தினசரி எட்டு மணி நேரம் வேலை என்று இருக்கும் நிலையில் ஆந்திரா மட்டும் ஏன் திரும்பத் திரும்ப தொழிலாளர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்றே புரியவில்லை என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.
– செய்திப் பிரிவு